பிரபல சமையல் நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அவர்களுக்குப் பிறந்த குழந்தையைத் தனது சொந்த மகனாக மாதம்பட்டி ரங்கராஜ் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகா ரங்கராஜ் என்ற தனது மகனின் வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பேன் என்றும், கடந்த ஆறு மாதங்களாகவே ஒரு தந்தையாக அவனுக்கான பொறுப்புகளை அன்போடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/DbaX8B1EyPi/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
மாதம்பட்டி ரங்கராஜின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மை இறுதியில் வென்று அதற்கான இடத்தை அடைந்துள்ளதாகவும், இந்த நீண்ட போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்லாமல் ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்காகவே நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவின் மூலம் ஒரு தாயாகத் தனது மனம் தற்போது முழுமையான அமைதியையும் நிம்மதியையும் அடைந்துள்ளதாக அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பதிவிட்டுள்ளார்.
