தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளி பதிவு செய்துள்ளார்.
220 தியேட்டர்களில் ரிலீசான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்று என பெயர் வாங்கியுள்ளது.
படம் ரிலீஸ் ஆன நாள் முதல் ரப்பர் பந்து திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுவாரஸ்யமான கிரிக்கெட் காட்சிகள், குடும்ப சண்டை என முதல் பாதி அட்டகாசமாக உள்ளது. இரண்டாவது பாதியும் சிறப்பாக உள்ளது. இந்த நிலையில் லப்பர் பந்து திரைப்படம்5 நாட்களில் உலக அளவில் 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.