
CINEMA
தங்கை திவ்யாவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில்… கலந்து கொண்ட குட்டி தளபதி ஜேசன் சஞ்சய்… மாலை அணிவித்து மகிழ்ந்த அழகிய தருணம்… வைரலாகும் வீடியோ…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். தனது ரசிகர்களால் தளபதி என்று கொண்டாடப்படுகிறார். தற்பொழுது இவர் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு ஆவலாக காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் விஜய் இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இணையத்தில் வெளியானது. தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். கல்பாத்தி அகோரம் தயாரிக்க உள்ளது. தளபதி விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திவ்யா ஷாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என்று இரண்டு பிள்ளைகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஜேசன் சஞ்சய் தற்பொழுது கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து முடித்துள்ளார். மேலும் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தற்பொழுது இயக்குனர் ஆவதிலேயே தீவிர முயற்சி காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் பற்றிய எந்த ஒரு தகவல் வெளியானலும் உடனே அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா பள்ளி படிப்பை முடித்துள்ள நிலையில் அவருக்கு பள்ளியில் பட்டமளிப்பு விழா நடத்தியுள்ளனர். இதில் திவ்யாவின் சகோதரரான ஜேசன் சஞ்சய் தங்கைக்கு மாலை அணிவித்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
Jason Sanjay and Divya Sasha ❤😍🤌🏻#LeoFlim #ThalapathyVijay𓃵 pic.twitter.com/vbdsqqqLem
— ᵛʲഫൗzy🦋 (@vjfouzyHaasan) May 27, 2023