தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மீண்டும் திமுக ஆட்சியே அமையும் எனத் தெரிவிக்கின்றன. பல்வேறு முகமைகளின் கணிப்புகள் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 122 முதல் 160 இடங்கள் வரை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் குறிப்பிடுகின்றன.
இந்த வெற்றிக் கணிப்புகளின் பின்னணியில், அமையவிருக்கும் புதிய அமைச்சரவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போதே ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் யாரையெல்லாம் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்பது குறித்த உத்தேசப் பட்டியலை அவர் ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இந்த உத்தேசப் பட்டியலில் தற்போது அமைச்சர்களாகப் பணியாற்றி வரும் சிலருடைய பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அமைச்சரவையில் செய்யப்பட உள்ள இந்த அதிரடி மாற்றங்கள் குறித்த தகவல் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பையும், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
