தமிழ் சினிமாவில் பல வகையான படங்கள் வருவதுண்டு. காதல் திரைப்படங்கள், ஆக்ஷன் திரைப்படங்கள் வந்தாலும் அம்மா மகன் செண்டிமெண்ட் அப்பா மகள் சென்டிமென்ட் போன்ற படங்கள் வரும் மக்கள் வரவேற்பை பெரும். அப்பா மகள் சென்டிமென்ட் என்பது எப்பவுமே ஸ்பெஷலான ஒரு பந்தம். இந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புவார்கள். தமிழ் சினிமாவில் அப்பா மகள் செண்டிமெண்டில் வெளிவந்த படங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.
1. அபியும் நானும்
2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அபியும் நானும். பிரகாஷ்ராஜ் தயாரித்து இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தை இயக்கியவர் ராதா மோகன். படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்திருப்பார். இது தவிர ஐஸ்வர்யா பாஸ்கரன், கணேஷ் வெங்கட்ராமன், பிரித்விராஜ் கெஸ்ட் ரோலிலும் நடித்திருப்பார். இத்திரைப்படம் தந்தை மகளுக்கான பாசப்பினைப்பினை அருமையாக எடுத்துக்காட்டி நல்ல விமர்சனங்களை பெற்றது.
2. தெய்வத்திருமகள்
விக்ரம் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெய்வத்திருமகள். இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருப்பார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பார். அனுஷ்கா செட்டி, அமலாபால், சந்தானம், எம் எஸ் பாஸ்கர், நாசர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இந்த திரைப்படமும் தந்தை மகளுக்காக போராடும் போராட்டத்தை அருமையாக எடுத்துக்காட்டி இருக்கும்.
3. தெறி
2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இத்திரைப்படத்தை அட்லீ இயக்கி இருப்பார். விஜய் உடன் எமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார் ராஜேந்திரன் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. தந்தை மகனின் அழகான சுட்டித்தனத்தை திரைப்படம் அழகாக எடுத்துக்காட்டி இருக்கும். வில்லனிடமிருந்து தனது மகளை காப்பாற்ற போராடும் தந்தையின் கதையை இந்த படம் கொண்டிருந்தது.
4. என்னை அறிந்தால்
நடிகர் அஜித், அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் என்னை அறிந்தால். இத்திரைப்படத்தில் போலீஸ் ஆபீசராக நடித்திருக்கும் அஜித் குமார் குழந்தையுடன் இருக்கும் த்ரிஷாவை காதலிப்பார். எதிரிகள் த்ரிஷாவை கொன்றுவிடுகின்றனர். தான் காதலித்த த்ரிஷாவின் குழந்தையை தன் மகளாக பாவித்து நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குவார் அஜித் குமார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
5. தங்க மீன்கள்
கற்றது தமிழ் ராம் இயக்கி நடித்து 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்க மீன்கள். இந்த திரைப்படம் தந்தை மற்றும் மகளின் பாசத்தை அருமையாக வெளிப்படுத்தி காட்டியிருப்பார். இந்த திரைப்படம் பாராட்டுகளை பெற்றதோடு பல தேசிய விருதுகளையும் வென்றது.
6. கனா
அருண் ராஜா காமராஜ் எழுதி இயக்கிய திரைப்படம் கனா. இது 2018 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். கிரிக்கெட்டராக ஆக வேண்டும் என்ற மகளின் கனவை ஏழை விவசாயியான தந்தை எப்படி மகளின் லட்சியத்தை அடைய வைக்கிறார் என்பதை இந்த திரைப்படம் அழகாக காட்டியிருக்கும். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.