இதான் காரணமா?.. கண்ணீரில் முடிந்த வாழ்க்கை… கடன் வாங்கியதால் பறிபோன உயிர்… 43-வது மாடியிலிருந்து குதித்து இளைஞர் பலி… கலங்கவைக்கும் சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 3, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 43-வது மாடியில் இருந்து குதித்து 35 வயது இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் மானேசர் பகுதியைச் சேர்ந்த சம்பவ் என்ற அந்த நபர், செக்டார் 94-ல் அமைந்துள்ள இந்த குடியிருப்பில் நேற்றைய தினம் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையிலேயே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த துயர சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லை காரணமாகவே அவர் இந்த முடிவை தேடிக்கொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.