Connect with us

சோள முத்தா போச்சா..? இரண்டாவது நாளிலேயே சரிந்த ‘லியோ’ பட வசூல்… இவ்வளவு தானா…?

CINEMA

சோள முத்தா போச்சா..? இரண்டாவது நாளிலேயே சரிந்த ‘லியோ’ பட வசூல்… இவ்வளவு தானா…?

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்பொழுது தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக நேற்று வெளிவந்த திரைப்படம் லியோ. இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ளது.  உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

   

இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இத்திரைப்படம்  சில விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. முதல் நாளில் ரூ.148 கோடி ‘லியோ’ திரைப்படம் வசூல் செய்ததாக, படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது.

ஆனால் , தற்போது ‘லியோ’ படத்தின் இரண்டாவது நாள் வசூல் பலத்த அடி வாங்கியுள்ளது. அதாவது இரண்டாவது நாளில் ‘லியோ’ படத்தின் வசூல் 44% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இந்தியாவில் மட்டும் இரண்டாவது நாளில் லியோ படம் ரூ.42.50 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் ரூ.24 கோடியும், ஆந்திரா-தெலுங்கானா மற்றும் கேரளாவில் தலா ரூ.6 கோடியும் வசூலித்துள்ளது. கர்நாடகாவில் ரூ.4.50 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது முதல் நாளை விட மிக குறைவு என்பதால் 1000 கோடி கிளப்பில் லியோ இணையுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
To Top