அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 24, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது மாமா முருகேசனின் இளைய மகள் தாரணியைக் காதலித்து வந்துள்ளார். சிவபாலனின் அண்ணன் முருகேசன் ஏற்கனவே தாரணியின் மூத்த அக்கா அபினாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிவபாலன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகக் கூறி, தாரணியை அவருக்குத் திருமணம் செய்து தர முருகேசனின் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று சிவபாலன் மீண்டும் மாமா வீட்டிற்குச் சென்று தாரணியைத் திருமணம் செய்து வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிவபாலன் அரிவாளால் மாமா முருகேசன் மற்றும் அவரது மகன் அருணைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பதிலுக்கு ஆத்திரமடைந்த முருகேசனும் அருணும் சேர்ந்து சிவபாலனை அரிவாளால் வெட்டியதில், அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மானாமதுரை காவல்துறையினர், சிவபாலனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த படுகொலை தொடர்பாகக் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணின் தந்தை முருகேசன் மற்றும் சகோதரர் அருண் ஆகிய இருவரையும் கைது செய்தனர். செங்கல்பட்டு பிரவீன்குமார் கொலைச் சம்பவத்தின் சுவடு வடுவதற்குள், காதல் விவகாரத்தில் அரங்கேறியுள்ள இந்த மற்றொரு கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.