ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்புகின்ற மாற்றங்கள் ஆனது 12 ராசிகளிலும் சாதகப் பாதக மாற்றங்களை ஏற்படுத்தும். கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக ராகு பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் உள்ளது. காரணம் ராகவும் சனி பகவான் போல ஒருவருடைய செயல்களில் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் பலன் கொடுக்கக் கூடியவர். ராகு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று அதிகாலை 2.11 மணிக்கு ராசியை மாற்றுகின்றார்.
தற்போது ராகு பூர்வ பாத்ரபாத நட்சத்திரத்தின் முதல் இடத்தில் இருக்கின்றார். குறித்த திகதியில் சதாபிஷ நட்சத்திரத்தில் நான்காவது இடத்தில் இடப்பெயர்வு அடைவார். இந்த ராகு பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வகையில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் செல்வ செழிப்பு கிடைக்கப் போகிறது.
மிதுனம்:
இந்த ராகு பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு எல்லா வகையிலும் சாதகமான பலன்களை கொடுக்கும். பல நாட்களாக முயற்சி செய்து வந்த விஷயங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கைகூடும். நிதி நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவுவதோடு திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ப்புக்கு வரும். பண வரவு திருப்தியாக அமையும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு குறித்த ராகு பெயர்ச்சியானது தொழில் ரீதியிலும் வியாபார ரீதியிலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இதுவரை வழங்கிய கடின உழைப்புக்கு எதிர்பார்த்ததை விட அதிக பலனை ராகு கொடுக்கப் போகின்றார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் மற்றும் ஆரோக்கிய மேம்படும். மன அமைதியும் தொழில் மீதான ஆர்வமும் அதிகரிக்கும்.
மகரம்:
இந்த ராகு பெயர்ச்சி மகர ராசியினருக்கு எதிர்பாராத பணவரவையும் பதவி உயர்வையும் கொடுக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் உச்சகட்ட லாபம் இருக்கும். நிதி விஷயங்களில் நிலைத்தன்மை உண்டாகும். நீண்டகால முதலீடுகள் அதிக லாபத்தை தரும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கு அல்லது புதிய துறையில் வேலைவாய்ப்பு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மறையான எண்ணங்கள் உருவாகும்.
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…
பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…