பிரதீப் ரங்கநாதனை வைத்து விட்ட இடத்தை பிடிக்க முயன்ற விக்னேஷ் சிவன்.. கடைசில இப்படி ஆயிடுச்சே..!!

By Priya Ram on ஜூலை 4, 2024

Spread the love

லவ் டுடே படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கோவை ஈஷா மையத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

எல்.ஐ.சி' படத்துக்கு சிக்கல்? - மின்னம்பலம்

   

இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். எல்ஐசி படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். முதலில் பிரதீப் ரங்கநாதன் நடித்த காட்சிகளை படமாக்கிவிட்டு அடுத்ததாக சூர்யா நடித்த காட்சிகளை விக்னேஷ் சிவன் படமாக்கினார். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று எல்ஐசி படத்தின் ஷூட்டிங் நடத்தினார்கள்.

   

vignesh shivan reveals project with pradeep ranganathan for the first time  | Galatta

 

இந்த நிலையில் பிரபல யூட்யூப் வலைப்பேச்சு சேனலில் எல்ஐசி படத்தை ட்ராப் செய்து விட்டதாக கூறியுள்ளனர். எல்.ஐ.சி படத்தை ஆரம்பிக்கும் போது சாட்டிலைட் பிசினஸ் நன்றாக இருந்தது. அதை வைத்து எல்ஐசி படத்திற்கு தயாரிப்பாளர் ஒரு பட்ஜெட்டை நிர்ணயித்து விட்டார். ஆனால் தற்போது சாட்டிலைட் டிஜிட்டல் பிசினஸ் குறைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டில் அந்த படத்தை எடுக்க முடியாது.

Director Pradeep Ranganathan To Mark His Acting Debut In Vignesh Shivan's  Wikki 6?

அப்படி எடுத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என லலித் நினைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை முடிவில் எல்ஐசி படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. நிலைமை சரியான பிறகு மீண்டும் எல்ஐசி படத்தை தொடங்க வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளனர். இதற்கிடையே பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தில் நடித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

It's official! Vignesh Shivan to direct 'Love Today' star Pradeep  Ranganathan | Tamil Movie News - Times of India