‘லால் சலாம்’ படத்தின் ‘மொய்தின் பாய்’ கெட்டப்பில்… மாஸாக வலம் வரும் சூப்பர் ஸ்டார்… வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் ரிலீசாக காத்திருக்கிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும், இந்த வேளையில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

   

அதன்படி மகள் ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்று  நடிக்கும் ‘மொய்தின் பாய்’ என்ற கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது. நடிகர் விஷ்ணு விஷாலும் ,விக்ராந்த்தும் நடிகர்களாக நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் பல்வேறு இடங்களில் தற்பொழுது காட்சிப்படுத்தப்பட்டு வரும், இந்த வேளையில் நடிகர் ரஜினிகாந்த் காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

மொய்தீன் பாய் கெட்டபில் செம மாஸாக வலம் வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரிய ஸ்டைலோடு மொய்தீன் பாய் கெட்டபில் கெத்த மாஸா நடந்து வரும் அந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் வீடியோவை படு வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….