அட, நம்ம சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனா இது?.. இளம் வயதில் இவ்வளவு அழகா இருக்காங்களே..!

By Nanthini on செப்டம்பர் 25, 2024

Spread the love

லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவில் பாலக்காட்டில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். 16 வயதில் நிச்சயதார்த்தம் செய்து 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர் லஷ்மி ராமகிருஷ்ணன். இவர் தென்னிந்திய நடிகை மற்றும் இயக்குனர் ஆவார். அவர் 2006 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான பின்னர் தமிழ் திரைப்படங்களுக்கு வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

   

2008 ஆம் ஆண்டு கரு பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படத்தில் நாயகியான சினேகாவின் அம்மாவாக நடித்தார். இதுவே அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் ஆகும். 2012 ஆம் ஆண்டு ‘ஆரோகணம்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக ஆனார் லட்சுமி ராமகிருஷ்ணன். இது தவிர சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

   

 

இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1500 எபிசோடுகளுக்கு மேல் நடத்தியுள்ளார். இது தவிர 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் லஷ்மி ராமகிருஷ்ணனின் இளம் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இளமையில் இவ்வளவு அழகா இருக்காங்களே என்று வர்ணித்து வருகிறார்கள்.

author avatar
Nanthini