மாடர்ன் டிரஸ்ஸில் புகைப்படங்களை வெளியிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்!… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….

By Begam

Published on:

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ல் கேரளாவில் பிறந்தவர். இவர் தனது 15 வயதில் ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது 15 வயதிலிருந்து 35 வயது வரை ஓமன் நாட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 2005இல் இந்தியா வந்தார் லட்சுமி. அதன் பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கணவருடன் கோயம்புத்தூரில் செட்டில் ஆனார்.

   

இவர் மிஷ்கின் இயக்கத்தில் 2012ல் வெளியான ‘யுத்தம் செய்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து ஆரோகணம் ,நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி என மூன்று படங்களை இயக்கினார். மேலும் பொய் சொல்ல போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், சென்னையில் ஒரு நாள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட வேலை என்னவென்றால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி.  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட மனிதர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள மாடர்ன் டிரஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் நெட்டிசன்களால் கலாய்த்துவரப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….