பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து பிரபல தொலைக்காட்சி நடிகரான குமரன் எதிர்பாராத விதமாக வெளியேறியுள்ளார். போட்டி தொடங்கி 23 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டின் உள்ளே வைக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவர் தானாகவே நடையை கட்டியுள்ளார். மக்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வாக்குகளும் பெற்று வந்த ஒரு போட்டியாளர் பணத்தை எடுத்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறியது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரனின் இந்த திடீர் முடிவிற்கு சக போட்டியாளரான லட்சுமி பிரியாவே முக்கிய காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் லட்சுமி பிரியா கொடுத்த தொடர் தொல்லைகளையும், மன உளைச்சலையும் தாங்க முடியாமலேயே அமைதியான குணம் கொண்ட குமரன் இந்த முடிவை எடுத்ததாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. அதே சமயம், டிவி நடிகரான அவர் ஆரம்பம் முதலே நிகழ்ச்சியில் பெரிதாக எந்த செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதால் அவர் கிளம்பியதே சரி என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாரம் தோறும் மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று வந்த குமரனை இப்படி வெளியேற்றியதன் மூலம், பார்வையாளர்களின் வாக்குகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டதாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். லட்சுமி பிரியாவை இந்த 10-வது சீசனின் வெற்றியாளராக மாற்றுவதற்காகவே பிக் பாஸ் குழுவினர் திட்டமிட்டு சதி செய்து குமரனை வெளியேற்றிவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், என்ன நடந்தாலும் லட்சுமி பிரியாவை பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக விடமாட்டோம் என பார்வையாளர்கள் சபதம் எடுத்து தங்களின் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
