பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து திரை உலகை தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்த சரத்குமார் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சேரன் பாண்டியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் சரத்குமார், விஜயகுமார், நாகேஷ், ஆனந்த்பாபு, மஞ்சுளா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த நிலையில் கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் சரத்குமார் உடன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமார் அப்படின்னு ஒருத்தர போட்டதுமே அந்த படத்துல எனக்கு ஞாபகம் வருவது ஒன்றுதான்.
அந்த படத்துல 4,5 நாள் தான் சரத்குமார் நடிச்சாரு. குட்லக் தியேட்டர்ல படம் பார்த்தோம். எல்லாருமே கைத்தட்டி பாராட்டிட்டு போனாங்க. ஆனா சரத்குமார் மட்டும் திரும்பி திரும்பி அழுதாரு. அவங்க மனைவி மத்த கலைஞர்கள் எல்லாருமே சமாதானப்படுத்தினார்கள். ஆனாலும் அவர் அழுதுகிட்டே தான் இருந்தாரு. யாரை பார்த்தாலும் கட்டிப்பிடிச்சு அழுதாரு.
நான் என்னங்க இப்படி அழுறீங்க அப்படின்னு கேட்டேன். உடனே சரத்குமார் நான் நினைக்கவே இல்ல. நாலாம் இப்படி நடிச்சிருப்பேன். நீங்க எந்த படத்தில் என்னை ஹீரோவா ஆக்கிட்டீங்க. நான் 4,5 நாள் தானே நடிச்சேன். இவ்வளவு சீன்ஸ் நான் வருவேன்னு எனக்கு தெரியல அப்படின்னு சொல்லி அழுதாரு என கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.