கலக்கப்போவது யாரு யோகியின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

கலக்கப்போவது யாரு யோகியின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர்தான் யோகி.

இவரின் காமெடிகளுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய காதலால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி திரை உலகில் தற்போது காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலிலும் கூட நமச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த சீரியலில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தன்னுடைய காதலி சவுந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் 2020 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி நடைபெற்றது. யோகி மற்றும் சௌந்தர்யா இருவருமே பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

நண்பர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். கல்லூரி ரியூனியன் சந்திப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவருமே வீட்டில் தெரிவிக்க பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

தற்போது யோகி சினிமாவிலும் சீரியல்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை ரசிகர்களும் அதிக அளவு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Archana