20 நாளில் இது சாத்தியமா..? ஏழை குடும்பத்திற்கு KPY பாலா செய்த உதவி.. வாழ்த்தும் நெட்டிசன்கள்..!!

By Priya Ram on செப்டம்பர் 2, 2024

Spread the love

ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் KPY பாலா. இப்போது திரைப்படங்களிலும் பாலா நடித்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பாலா திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இப்போது பாலா பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

   

இந்த வயதிலும் பாலா தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொள்வது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது என பாலா செய்த உதவிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரன்ஸ் மாற்றம் என்னும் சேவையை தொடங்கினார்.

   

 

இந்த சேவையில் KPY பாலா எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்தனர். அவர்கள் மட்டுமில்லாமல் சிறு வயது முதலே நடிகர் லாரன்சால் வளர்க்கப்பட்டவர்களும் இப்போது மாற்றம் சேவையில் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தீ விபத்தில் வீட்டை இழந்த ஒரு குடும்பத்தினருக்கு தனது சொந்த செலவில் பாலா வீடு கட்டி கொடுத்துள்ளார்.

KBY Bala

#image_title

சுமார் 20 நாட்களிலேயே வீடு கட்டி அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் புது வீட்டை பாலாவும் அந்த குடும்பத்தினரும் ரிப்பன் வெட்டி திறந்து உள்ளே செல்கின்றனர். அதன் பிறகு புது வீட்டை பார்த்த மகிழ்ச்சியில் அந்த குடும்பத்து பெண் கண்ணீர் விட்டு அழுகிறார். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு பாலா அங்கிருந்து செல்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாலாவை பாராட்டி வருகின்றனர்.