சின்னத்திரையில் பலருக்கும் ஓடி ஓடி உதவி செய்து வரும் கேபிஒய் பாலா தற்போது அயனிங் கடை வைத்திருக்கும் ஒரு பெண்மணிக்கு லாட்டரி கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் கேபிஒய் பாலா.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார். தற்போது பெரிய பெரிய நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக கலக்கி வருகின்றார். தற்போது வெள்ளி திரையில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் தொடர்ந்து பலருக்கும் உதவி செய்து வருகின்றார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் ஆதரவற்ற பெரியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வரும் கேபிஒய் பாலா ராகவா லாரன்ஸ் மாஸ்டருடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றார்.
அவர் தொடங்கிய மாற்றம் என்ற அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவிகளை பாரபட்சம் பார்க்காமல் செய்து வருகின்றார். இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அயனிங் கடை வைத்து கஷ்டப்பட்டு வரும் ஒரு பெண்மணிக்கு லாண்டரிக்கடையாக மாற்ற தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கின்றார். இந்த நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி வைலாகி வருகின்றது.