நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் அபிநய். இந்தப் படத்திற்குப் பிறகு ஜங்ஷன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த இவர் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் போதிய வருமானமும் இல்லாததால் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. வயிறு வீங்கி ஆல் எழும்பும் தோலுமாக இருக்கும் நிலையில் அவரைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கண்கலங்கி வருத்தம் தெரிவித்தனர். எப்படி இருந்த இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பலரும் வருந்திய நிலையில் சினிமா பிரபலங்களும் சிலர் உதவியதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி என்ற ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள பாலா தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகின்றார்.
அவ்வகையில் தற்போது அபிநய் வீட்டுக்கு நேரடியாக சென்று ஒரு லட்சம் ரூபாய் பண உதவி கொடுத்து பாலா உதவி உள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் மீண்டும் பழையபடி திரும்பி வந்து தனக்காக நடிக்கும் படத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பாலா கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பாலாவின் இந்த உதவி குறித்த வீடியோ வெளியாகி வரும் நிலையில் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பீகாரில் இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு பாடமாக இருக்கும் என அரசியல்…
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…