ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து அடுத்த உதவிக்கு தயாரான Kpy பாலா.. குவியும் வாழ்த்துக்கள்..!!

By Priya Ram

Published on:

கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இவர் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி, பாண்டி, யோகி பாபு நடித்த ஷூ, விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

தான் சம்பாதித்த பணத்தை வைத்து மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். வெள்ளத்தால் மக்கள் பாதிக்கபட்ட போது அவரால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் சிறுவர்களை படிக்க வைப்பதற்கும் தனது படத்தை செலவு செய்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பாலா கழிப்பறை இல்லாமல் தவித்த மாணவர்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்க உள்ளார். வந்தவாசியில் இருக்கும் அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி இல்லை என பாலாவுக்கு கடிதம் சென்றுள்ளது. அதற்கு 15 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படும்.

ஆனால் பாலாவால் 5 லட்சம் தான் கொடுக்க முடியும் என்பதால் ராகவா லாரன்சை அணுகி சம்மதம் வாங்கியுள்ளார். ராகவா லாரன்சும், பாலாவும் அந்த பள்ளிக்கு சென்று பார்வையிட்டு, கழிப்பறை கட்டுவதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram