மனித கடவுள் பாலாவின் அடுத்த நெகிழ வைக்கும் சேவை.. இந்த மனசால தான் மனுஷன் உயர்ந்துட்டாரு.. வைரல் வீடியோ..!

By Nanthini on ஆனி 28, 2025

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார். அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் KPY பாலா. இவ்வாறு தொடர்ந்து தினம்தோறும் பல சேவைகளை பாலா செய்து வருகிறார்.

இப்படியான நிலையில் சாலையில் தினமும் இருசக்கர வாகனத்தில் சாப்பாடு வித்துக் கொண்டிருக்கும் நபருக்கு பாலா உதவியுள்ளார். யாரும் வாங்காமல் மீதமிருந்த சாப்பாடுகளுக்கு பணம் கொடுத்து அனைவருக்கும் இந்த சாப்பாட்டை இலவசமாக கொடுத்திடுங்க என்று கூறி அரிசி மற்றும் சில பொருட்களை அவருக்கு வாங்கி கொடுத்து பண உதவியும் செய்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பாலாவின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Balan Akassh Balaiyan Jaganathan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)