சிறுநீரக திருட்டு கும்பலுக்கு செக்.! தூசு தட்டப்படும் வழக்கு… “யாராக இருந்தாலும் தப்ப முடியாது” அதிரடி ஆக்ஷனில் சுகாதாரத்துறை அமைச்சர்..!!

Spread the love

தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை, தேர்தல் காரணமாகச் சற்று தொய்வடைந்திருந்தது. தற்போது அந்த விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, முழு வெளிப்படைத்தன்மையுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அதிகம் நாடும் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை, மருத்துவர்களின் இருப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்வதே தங்களின் முதன்மை இலக்கு என்று அமைச்சர் கூறியுள்ளார். அத்துடன், தனியார் மருத்துவமனைகளுக்கான உரிமம் வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பித்தவுடனேயே ஓராண்டு செல்லத்தக்க தற்காலிக உரிமம் வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்; பின்னர் ஓராண்டுக்குள் நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கான நிரந்தர உரிமம் வழங்கப்படும். இதேபோல், கருத்தரிப்பு மையங்களுக்கான அனுமதி நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையை ஊக்குவிக்கும் ‘காயகல்பம்’ திட்டத்தின்கீழ், இனி ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக 4 முறை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகள் கௌரவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

காங்கிரஸ்காரங்க நன்றி கெட்டவங்க… மாணிக்கம் தாகூர் சொன்னது பொய்.. ஆர்.எஸ் பாரதி சாடல்..!!

திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுக…

7 minutes ago

ஆஸ்பத்திரி டாய்லெட் வழியா ஓடி… தியேட்டரில் ‘கருப்பு’ படம் பார்த்து ரசித்த 100 ஆண்டு சிறை கைதி.. போலீஸ் கொடுத்த ‘ரியல் கிளைமாக்ஸ்’ ட்விஸ்ட்….!

விருதுநகரில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பலாத்கார வழக்கு, திருட்டு…

9 minutes ago

“என் நகையை திருடிட்டாங்க!”.. ‘கருப்பு’ படத்தின் பின்னணியில் இருக்கும் நிஜக் கதை இது தான்.. உண்மையை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி…!!!

நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்திற்குத் தியேட்டர்களில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. த்ரிஷா,…

9 minutes ago

“3 மணிக்கு வந்த போன் கால்.. 5 மணிக்கு மாறிய டீல்”… திமுக – அதிமுக ரகசிய பேச்சுவார்த்தையை அம்பலப்படுத்திய காங்கிரஸ்… அலறும் அரசியல் களம்…!

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்…

13 minutes ago

மகனுக்கு 3 சக்கர வண்டி வாங்க காசில்லை.. இன்று ₹12 கோடிக்கு அதிபதி!.. கண்ணீர் விட்ட ஏழைத் தந்தையின் விபரீத அதிர்ஷ்டம்.. நெட்டிசன்களை உருகவைத்த சம்பவம்..!!

கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…

18 minutes ago

தவெக-வுக்கு தாவிய மதிமுக சிங்கம்… 33 வருட உழைப்பை ஒரே நாளில் தூக்கி எறிந்த நாகராஜ்… பின்னணியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து, அக்கட்சியின் முக்கிய…

19 minutes ago