தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்துப் பொது மேடையில் ஆபாசமாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினர் அளித்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் தஞ்சை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸார், உதயநிதியைக் கைது செய்து விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவத்திற்குப் பாஜக மாநில துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் ஒரு பெண்ணை இழிவுபடுத்திப் பேசியதற்குத் தனது தவறை உணர்ந்து நடிகை திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதிக்கு இருக்கிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
