பிரபல இயக்குனரான ராம் தங்கர் பச்சான் இடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீசான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் ராம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அந்த திரைப்படம் ஜீவாவிற்கும், அஞ்சலிக்கும் நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
அதன் பிறகு தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்களை ராம் இயக்கியுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் தங்க மீன்கள் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் ராம், சாதனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 44-வது உலகளாவிய இந்திய திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் தங்க மீன்கள் திரைப்படம் தேர்வாகியது. இந்த திரைப்படத்திற்கு மத்திய அரசின் மூன்று விருதுகள் கிடைத்தது.
மீன் குஞ்சுகளுக்கு இடையே தனது மகளை தங்கமீனாக வளர்க்க ஆசைப்படும் தந்தையின் பாசம் பற்றிய கதைதான் தங்கமீன்கள். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கல்வியை கட்டணங்கள், ஒரு ஏழை குடும்பத்தை எப்படி அலை கழிக்கும் என்ற கதையை கையில் எடுத்து அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து ராம் கதையை அழகாக சொல்லி இருப்பார். இந்த படத்தில் முதலில் பிரபல காமெடி நடிகரான கருணாசை நடிக்க வைக்கலாம் என ராம் நினைத்துள்ளார்.
இது பற்றி படத்தின் தயாரிப்பாளரான கௌதம் வாசுதேவ் மேனனிடம் கூறியுள்ளார். ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் ராம் கதை கூறியதை வைத்து யோசித்துப் பார்த்து நீங்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடித்தால் நான் படத்தை தயாரிக்கிறேன் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். அதற்கு பிறகு தான் இயக்குனர் ராமே இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.