“அது தான் ஒரு பெண்ணுக்கு மிக பெரிய பாதுகாப்பாம்”.. என்ன சொல்கிறது ‘கண்ணகி’ பட ட்ரைலர்..

By Begam on டிசம்பர் 4, 2023

Spread the love

நடிகைகள் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஹாலினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் கண்ணகி. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. மறைந்த நடிகர் மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

   

கலை , நேத்ரா, நதி , கீதா ஆகிய நான்கு பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது கண்ணகி. யஹ்வந்த் கிஷோர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராம்ஜீ ஒளிப்பதிவு செய்ய ,சரத்குமார்  படத்தொகுப்பை செய்துள்ளார். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் இத்திரைப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கலாம் என கூறப்படுகிறது. ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

   

 

சின்ன பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணகி படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 3 நிமிடங்கள் வரை ஓடும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களின் காதல், திருமணம், தாய்மை போன்றவற்றை பின்னணியாக வைத்து, நான்கு கதைகளுடன் உருவாகியுள்ளது கண்ணகி. முதலில் கண்ணகி படத்தில் இருந்து வெளியான கீர்த்தி பாண்டியனின் போஸ்டரும் அதிகமாக வைரலாகியிருந்தது.

வெவ்வேறு பொருளாதார சூழலைச் சேர்ந்த இந்த 4 பெண்கள் தங்களது வாழ்க்கையில் வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.  கட்டாயத்தின் பேரில் திருமணம். எதிர்பாராத கருத்தரிப்பு, விவாகரத்து, திருமணம் செய்துகொள்ளாததால் எதிர்கொள்ளும் அவதூறுகள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இவர்களது போராட்ட வாழ்க்கையே ‘கண்ணகி’ கதையாக ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெற்றிபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதோ கண்ணகி ட்ரைலர்…