பலராலும் ஒதுக்கப்பட்ட ரஜினி… இனி சினிமாவில் எதிர்காலம் இல்லை என்ற நிலை- தூக்கிவிட்ட கண்ணதாசனின் பாடல் வரிகள்!

By vinoth on ஜூன் 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

   

1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.

   

ரஜினி ஹீரோவாக வளர்ந்து வந்த போது நிறைய சர்ச்சைகளில் சிக்கினார். ஒரு நடிகையுடன் காதல் ஏற்பட்டு அது தோல்வியில் முடிய, நிறைய குடிக்க ஆரம்பித்தார் என்று சொல்லப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் அவர் மோசமாக நடந்துகொள்ள கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதே போல அதிகமாக ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்ததால் மன அழுத்தத்துக்கு ஆளாகி மனநல மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை எடுத்துள்ளார்.

 

இதனால் ரஜினி அவ்வளவுதான், இனிமேல் அவரால் சினிமாவில் நடிக்க முடியாது என அவருக்குப் பிடிக்காதவர்களால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. அந்த நிலைமையில்தான் ரஜினியை வைத்து பில்லா படத்தை எடுத்தார் பாலாஜி. அந்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

ரஜினி மீதிருக்கும் நெகட்டிவ் இமேஜை மாற்றவேண்டும் என பாடல்களில் பாசிட்டிவ்வாக எழுத சொல்லி கண்ணதாசனிடம் கேட்டுள்ளனர். அப்படிதான் அந்த படத்தில் இடம்பெறும் பாடலில் கண்ணதாசன் “நாலு படி மேல போனா நல்லவன விடமாட்டாங்க…  பாடுபட்டு பேரை சேத்தா பல கதைகள் சொல்லுவாங்க… யாரு சொல்லி என்ன பண்ணா, நானும் இப்போ நல்லா இருக்கேன்…. நம்பிக்கையை மனசுல வச்சு பின்னால பாக்காம முன்னேறு” என்ற வரிகளை எழுதி ரஜினி பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்படி எழுதியுள்ளார்.