Connect with us

5000க்கும் மேல் பாடல் எழுதிய கண்ணதாசனின் கடைசி பாட்டு எது தெரியுமா..? கமலுக்கு கிடைத்த வர பிரசாதம்..

CINEMA

5000க்கும் மேல் பாடல் எழுதிய கண்ணதாசனின் கடைசி பாட்டு எது தெரியுமா..? கமலுக்கு கிடைத்த வர பிரசாதம்..

 

கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின் காலம் மறைந்தாலும் கண்ணதாசனின் கவிதைகள் மறவாது. கண்ணதாசனின் கடைசி பாடல் வரி கமல்ஹாசன் படத்தில் அமைந்தது, அப்பாடல் இப்பொழுது வரை பட்டி தொட்டி எல்லாம் கேட்கப்பட்டு வருகிறது.
1927 பிறந்த அவர் எட்டாம் வகுப்பு வரை படித்து அதற்கு மேல் படிப்பதற்கு விருப்பம் இல்லாமல் படிப்பை கைவிட்டு விட்டார், ஆனால் பள்ளிக்கூடம் போக தான் அவருக்கு விருப்பமில்லை, கவிதைகளோ பாடல் வரிகளை படிப்பதில் நாவல்களை ருசிப்பதிலோ அவருக்கு என்றென்றும் ஆத்மா ஆத்மா விருப்பம் கொண்டிருப்பார்.

அப்படி அவரின் அந்த ஆர்வம் தான் இந்த சினிமாக்குள் அவரை பாடல் ஆசிரியராக கொண்டு வந்து கவிப்பேரரசு கண்ணதாசன் என்ற மாபெரும் ஒழிக்கப்படும் கரகோஷங்களை பெற்று எடுத்து தந்தது. இவர் 4,000 க்கும் மேற்பட்ட கவிதைகளில் எழுதி இருக்கிறார், 5000க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். கட்டுரைகள் பல எழுதியுள்ளார். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் “அரசவைக் கவிஞராக” இருந்தவர். 

   

குழந்தைக்காக என்ற படத்தில் வசனம் எழுதி தேசிய விரதன சாகித் அகாடமி விருதை பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்து உள்ளார். ஒரு படத்தில் ஒரு சிச்சுவேஷனை சொன்னவுடன் சற்றே யோசிக்காமல் தனக்குள் இருக்கும் திறமையை அப்படி வெளி கட்டுவார், அதாவது ஒரு படத்தின் சிச்சுவேஷனை கொடுத்து ட்யூனியம் கொடுத்து விட்டால் போதும் சட்டுன்று அந்த இடத்திலே அதற்கு ஏற்ற வரிகளை எழுதி இசைமைப்பாளரிடம் தந்துவிடுவார், அந்த அளவுக்கு வல்லமை படைத்தவர். இவர் படைத்த மாபெரும் படைப்புகள் இப்பொவரை ஒவ்வொருவரின் தனிப்பட்ட முறையில் கேட்கப்பட்டு வருகிறது, ஆனால் இவர் கடைசியாக எழுதிய பாடல் எந்த படம் அதில் யார் நடித்திருக்கிறார் தெரியுமா?

1982ல் பாலு மகேந்திரா அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் சுமிதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த “மூன்றாம் பிறையில்” தான் இவரின் கடைசி பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இப்படத்திற்கு ஒரு பாடல் ஒன்று எழுத கண்ணதாசன் அவர்களே அழைத்தார், இப்படத்தில் ஹீரோ ஹீரோயினிடம் தன் சோக அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிச்சுவேஷன் கூற அதை அப்படியே உள்வாங்கி அவர் வரிகளாக எழுதி தரப்பட்ட பாடல் தான் “கண்ணே கலைமானே” பாடலாகும்.

இப்பாடல் இப்ப வரை பலரின் மனதை கொள்ளை கொண்டு தான் இருக்கிறது. இப்பாடல் எழுதி தந்து பாடல் வெளியாகி பல விருதை பெற்றது. இதை எழுதிய ஆசிரியரான கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள் அதன் பின் எந்த பாடலும் எழுதவில்லை, ஏனென்றால் இவ் உலகை விட்டு அவர் பிரிந்து விட்டார், இவரின் கடைசி பாடலும் இதுவே. கமல்ஹாசன் அவர்களுக்கு இப்படத்தில் இவர் எழுதிய இந்த கடைசி பாடல் மூலமாக பெரிய பொக்கிஷமாகவே மாறிவிட்டது. கமல்ஹாசன் இதை பல இடங்களில் கூறி இருக்கிறார்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top