குணா படத்துல நிறைய குறைகள் இருக்கு… அதனால்தான் அந்த படம் ஓடல – பிரபல நடிகரிடம் ஓப்பனாக சொன்ன கமல்ஹாசன்!

By vinoth on ஜூலை 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் 90 களில் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம் போன்ற படங்களே அதற்கு உதாரணம். அந்த வகையில் கமல் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் குணா.

   

இந்த படம் இன்று ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டாலும் ரிலீஸான சமயத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான Tie me up Tie me down என்ற படத்தின் தழுவலில் உருவானது. இந்த படம் தோல்வி அடைந்தாலும் படத்தின் பாடல்கள் பெரியளவில் ஹிட்டாகின. சமீபத்தில் ரிலீஸாகி பெரிய வெற்றி பெற்ற மஞ்சும்மள் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்மணி அன்போடு காதலன் எழுதிய கடிதமே’ பாடலை பொருத்தமான இடத்தில் பயன்படுத்தி இருந்ததும் ஒரு காரணமாக அமைந்தது.

   

இந்நிலையில் குணா படத்தை கிட்டத்தட்ட அப்படியே தழுவி தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற திரைப்படமாக எடுத்து அதுவும் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் நடிகர் நண்டு ஜெகன் குணா படத்தின் தோல்வி பற்றி தான் கமல்ஹாசனிடம் வருத்தப்பட்டு பேசிய போது அவர் சொன்ன ஒரு தகவலை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

 

அதில் “நான் குணா படத்தின் தோல்வி குறித்து கமல் சாரிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு அவர் ‘ஜெகன் அந்த படத்தில் நிறைய குறைகள் உள்ளன. அதனால்தான் அது ஓடவில்லை’ என சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.