தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கி நேற்று நாகை, திருவாரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். அப்போது மக்கள் கோட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சியினர் பலரும் இந்த கூட்டம் வாக்காக மாறாது என்று விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமலஹாசன், “நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மட்டும் விமர்சனங்கள் எழுவது கிடையாது. நடிக்க வந்தாலும் விமர்சனங்கள் எழும். விஜய்க்கு கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. அது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். இது விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். நல்ல பாதையில் செல்லுங்கள். தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காக செய்யுங்கள் என்பது தான் நான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கும் வேண்டுகோள்” என்று கூறியுள்ளார்.
விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Flying And Ground Duty காலி…
பீகாரில் இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு பாடமாக இருக்கும் என அரசியல்…
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…