திரையுலகப் பிரபலங்களுக்குக் வழங்கப்படும் ராஜ்யசபா எம்.பி. பதவிகள் மீண்டும் மீண்டும் வெறும் அலங்காரப் பொறுப்புகளாகவே எஞ்சுகின்றனவா என்ற கேள்வியை, கமல்ஹாசனின் ஓராண்டு நாடாளுமன்றச் செயல்பாடுகள் எழுப்பியுள்ளன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான அவர் பதவியேற்ற பிறகு, அவையின் ஒட்டுமொத்த வருகைப் பதிவு 51 சதவீதமாக மட்டுமே சரிந்துள்ளதோடு, இதுவரை வெறும் இரண்டு கேள்விகளை மட்டுமே அவையில் முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரை முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பதும், ‘வந்தே மாதரம்’ தொடர்பான முக்கிய விவாதத்தின்போது அவைக்கு வராமல் தவிர்த்திருப்பதும் மக்கள் பிரதிநிதித்துவத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்கள் கோரிக்கைகளையும் மாநிலத்தின் குரலையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக வழக்கப்பட்ட மக்கள் வரியிலான் இந்த வாய்ப்பு, பிரபலங்களின் சுய பிரசாரத்திற்காக மட்டுமே பயன்படுகிறதோ என்ற விமர்சனம் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் தற்பொழுது தீவிரமடைந்துள்ளது.
