கதறி அழுத தம்பிகள்… அதிர்ச்சியில் சீமான்…. நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிய அந்த ‘முக்கிய’ பிரபலம்…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் களஞ்சியம், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலகல் தொடர்பாக சீமானுக்கு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், கொள்கை மற்றும் கருத்து வேறுபாடுகளுடன் கட்சியில் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீபகாலமாக கட்சியில் ஏற்பட்டுள்ள உள்மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்கள் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இத்தகைய போக்கு நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்கும் தமிழ் தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் முக்கியத் தூணாக விளங்கிய ஒருவரின் இந்த திடீர் விலகல், நாம் தமிழர் கட்சியின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.