நீண்ட படங்கள் ‘க்ளிக்’ ஆகாமல் போக இப்படி ஒரு காரணம் இருக்கா?… தயாரிப்பாளர் தாணு பகிர்ந்த தகவல்!

By vinoth on மார்ச் 25, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இயங்கும் தனித்தன்மை வாய்ந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ் தாணு. 1980 களில் விநியோகஸ்தராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த அவர் அதன் பின்னர் மெல்ல மெல்ல தயாரிப்பாளராக வளர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை எடுத்தார்.

தனது படங்களை சிறப்பாக எடுத்து அதற்கு வித்தியாசமான பிரம்மாண்டமான விளம்பரத்தை செய்து படத்தை மக்களைக் கொண்டு சென்று வெற்றி பெறுபவர் தாணு. தான் தயாரித்த கபாலி படத்தின் விளம்பரத்துக்காக ஏர் இந்தியா விமானத்தில் அதன் போஸ்டரை இடம்பெறவைத்தார். அந்தளவுக்கு வித்தியாசமாக யோசிக்கக் கூடியவர்.

   

அவர் தயாரித்த  ஆளவந்தான், கந்தசாமி போன்ற படங்கள் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் திரை வாழ்க்கையில் மிக அதிக செலவு செய்த உருவாக்கப்பட்ட படங்கள். ஆனால் அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்தபடி கலெக்‌ஷன் செய்யவில்லை. இந்நிலையில் கந்தசாமி படத்தில் நடந்த தவறு குறித்து தாணு ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

   

 

அதில் “கந்த சாமி படம் தோல்விப் படம் இல்லை. ஆனால் அந்த படம் மூன்று மணிநேரம் பத்து நிமிடம் ஓடும் படம். நான் இயக்குனர் சுசி கணேசனிடம் நீளத்தைக் குறைக்க சொன்னேன். ஆனால் அவர் லகான் படமெல்லாம் நீளமாக இல்லையா என்றார். நான் அவரிடம் ‘ஒருத்தன் படம் பாக்கணும்னு வீட்டுல இருந்து கெளம்பி தியேட்டருக்கு வர 1 மணிநேரம் ஆகும். அதே போல படம் முடிந்து வீட்டுக்கு செல்ல ஒரு மணிநேரம் ஆகும். தியேட்டரில் இடைவேளை வேறு 15 நிமிடம். நம்ம படம் மூனு மணிநேரத்துக்கு மேல.

இதுல எங்கயாவது மிஸ் ஆச்சுன்னா, அவனுக்கு அந்த அஞ்சு மணிநேரம் வேஸ்ட்டாயிடுச்சோன்னு தோனிடும். அதனால ஒரு அரைமணி நேரத்தைக் குறை’ன்னு சொன்னேன். ஆனால்  அவர் கேக்கல.” எனக் கூறியுள்ளார்.