நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க இளசுகளின் காதல், ரொமான்ஸ் மற்றும் பிரேக் கப்பை வைத்து ஒரு ஜாலியான கதையை தனுஷ் எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பல திறமைகளைக் கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்த நிலையில் ராயன் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்போது தனுஷ் தன்னுடைய சகோதரி மகனையும், அனிகா சுரேந்திரன் மற்றும் பிரியா வாரியார் ஆகியோரை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த திரைப்படம் தனுஷுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் தற்போது படக்குழுவினர் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்கத்தில் முதல்முறையாக சேர்ந்து வேலை பார்த்து உள்ளேன். படம் கண்டிப்பாக நல்லா இருக்கும் என்று நம்புகிறேன். நாங்க எல்லோரும் படம் பார்த்துட்டோம். ஒரு சிறந்த படமாக இருக்கும். ஸ்ரேயாஸ், சொன்னாரு படத்துக்காக நான் எதுவும் வாங்கவில்லை என்று. ஜெயிலர் திரைப்படம் முடிஞ்ச பிறகு வெற்றியை தொடர்ந்து எல்லோரையும் கூப்பிட்டு நல்லா பெருசா கவனிச்சாங்க. அதுபோல நீங்களும் இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு எனக்கு பெரிய பரிசு கொடுத்து கவனிச்சா நல்லா இருக்கும். அதனாலதான் படத்துக்கு நான் என் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று மேடையில் ஜிவி பிரகாஷ் கலகலப்பாக பேசியுள்ளார்.
“I have watched #NEEK, it will be a sureshot. As like how #Jailer team gifted after success of the film, you should gift me also😂.That’s why I didn’t get any salary for the film😄”
– GVPrakash pic.twitter.com/eDjBnv9AOs— AmuthaBharathi (@CinemaWithAB) February 11, 2025
