12,256 மத்திய அரசுப் பணிகள்: குரூப் பி மற்றும் சி பிரிவுகளில் வேலைவாய்ப்பு … SSC அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 14, 2026

Spread the love

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 12,256 குரூப் பி மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் அக்கவுண்டன்ட், அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபீசர் போன்ற பல்வேறு முக்கியப் பணிகள் அடங்கும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, 18 முதல் 27 வயதிற்குட்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணிகளுக்கான ஆரம்பச் சம்பளம் ₹25,500 முதல் அதிகபட்சமாக ₹1,40,000 வரை பணிக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ₹100 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 22-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.