வைரமுத்துவின் திறமைக்குதானே வாய்ப்புக் கொடுத்தீர்கள்… பஞ்சு அருணாசலம் இல்லன்னா இளையராஜா வந்திருக்க மாட்டாரா? – ஜேம்ஸ் வசந்தன் கேள்வி!

By vinoth on ஜூலை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.

1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

   

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

   

ஆனால் அடிக்கடி இரு தரப்புக்கும் இடையே மறைமுகமான வார்த்தைப் போர்கள் நடந்தவண்ணம் இருக்கும். சமீபத்தில் வைரமுத்து பாடல் வரிகளின் முக்கியத்துவம் பற்றி பேசிம் போது இளையராஜாவை சீண்டும் விதமாக ஒரு கருத்தைப் பேசியிருந்தார். அதைக் கண்டனம் செய்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் “இளையராஜாதான் உங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தார். அவர் ஃபோட்டோவை நீங்கள் வீட்டில் வைத்து கும்பிடவேண்டும்” என்றெல்லாம் பேசியிருந்தார்.

 

இந்நிலையில் இப்போது மற்றொரு இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இதுபற்றி பேசியுள்ளார். அதில் “வைரமுத்துவின் திறமைக்குதானே வாய்ப்புக் கொடுத்தீர்கள். அவர் வார்த்தைகள் உங்கள் மெருகேற்றும் என்றுதானே அவருக்கு வாய்ப்புக் கொடுத்தீர்கள். இது ஒரு பொன்மாலை பொழுதென்று அவர் கொடுத்த வரிகளை எஸ் பி பி கண்களில் ஒற்றிக் கொள்ளவில்லையா? அதனால் வாய்ப்புக் கொடுத்தேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது.

அப்படி பார்த்தால் பஞ்சு அருணாசலம்தான் இளையராஜாவுக்கு வாய்ப்புக் கொடுத்தார். அதனால் அவர்தான் ஜீனியஸ், இளையராஜா வேஸ்ட்டு என்று சொல்லிவிட முடியுமா?. இளையராஜா எவ்ளோ பெரிய ஜீனியஸ். பஞ்சு அருணாசலம் இல்லையென்றால் வேறு யாராவது ஒருவர் வாய்ப்புக் கொடுத்திருப்பார்.” எனப் பேசியுள்ளார்.