குக் வித் கோமாளி சிவாங்கி தற்பொழுது பிகாம் டிகிரி வாங்கியுள்ளார். தற்பொழுது அது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் குக்குகளும் கோமாளிகளும் செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் அதிக ரசிகர்களை தன் பக்கம் வைத்திருப்பவர் சிவாங்கி.
இவரது அழகான நகைச்சுவை உணர்வும், குரல் வளமும் ரசிகர்களை அதிகம் மகிழ்வித்தது என்றே கூறலாம். நடிகர் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்றபோது கண்டிப்பாக என்னுடைய அடுத்த படத்தில் இதிலிருந்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறியதான் அடிப்படையில் தற்போது சிவாங்கிக்கு அவர் தனது ‘டான்’ படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடிகையாக வெள்ளிதிரையில் அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் சிவாங்கி பிகாம் டிகிரியை முடித்து பட்டத்தை வாங்கி உள்ளார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘கொஞ்சம் ஃபேமஸ் ஆயிட்டா போதுமே.. இவங்க அலப்பறை தாங்க முடியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ உங்களுக்காக…