மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரணி கடைசியாக அளித்த பேட்டி இது தான்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

By Mahalakshmi

Published on:

இசைஞானி இளையராஜாவின் தங்க மகளான பவதாரணி மறைந்த செய்தி கேட்டு திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பவதாரணியின் நினைவுகளை பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் YouTube சேனல்கள் பகிர்ந்து வருகின்றன. இந்த வரிசையில் பாடகி பவதாரணி அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

   

தமிழகம் முழுவதும் இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாளை சிறப்பிக்க கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்டமாக  இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜாவின் மகள் பவதாரணி பேட்டியளித்துள்ளார். இதுவே அவர் அளித்த கடைசி பேட்டி என்பது வருத்தத்தை தெரிவிக்கிறது.

இதில் இளையராஜாவின் பிறந்தநாளை கோயம்புத்தூரில் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இளையராஜாவிடம் இருந்து அவரது மகள் பவதாரணி ஆன்மீகம் பகுத்தறிவு ஒழுக்கம் மற்றும் நேர்மையையும் கற்றுக் கொண்டதாக பெருமையாக கூறியிருந்தார்.

இசைஞானி இளையராஜா இசை அமைப்பில் வெளியான பாடலில் அவருக்கு பிடித்த பாடலை பாடியுள்ளார். அது என்னவென்றால் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான “பிரண்ட்ஸ்” திரைப்படத்தில் ‘தென்றல் வரும் வழியை  பூக்கள் அறியாத’  பாடலை பாடியுள்ளார் பாடகி பவதாரணி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அளித்த பேட்டியை கடைசி பேட்டி என இணையதளத்தில் பரவி வருகிறது.

author avatar
Mahalakshmi