தனுஷின் ‘மாரி 2’ திரைப்பட வில்லனா இவர்?… ஆள் அடையாளமே தெரியலையே…. வைரலாகும் லேட்டஸ்ட் லுக் இதோ…

By Begam

Published on:

நடிகர் தனுஷின் மாரி 2 திரைப்படத்தில் நடித்த வில்லன் நடிகரான டோவினோ தாமஸின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘மாரி 2’. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் போன்ற  நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்தது.

   

இத்திரைப்படத்தில் வில்லனாக டோவினோ தாமஸ் என்பவர் நடித்திருந்தார். மலையாள நடிகரான டோவினோ தாமஸ் இத்திரைப்படத்தில் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து மிரட்டலாக நடித்து அசத்தியிருப்பார். வடசென்னை ட்ரக் மாபியாக்களுக்குள் நடைபெறும் ஈகோ மோதலும் கோஷ்டி மோதலும் தான் மாரி 2 திரைப்படத்தின் கதை.

மாரி 2 படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. இவர் தற்பொழுது மலையாள சினிமாவில் பயங்கர பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது டோவினோ தாமஸ் Adrishya Jalakangal என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் நடித்த அனுபவம் பற்றி பேசி இருக்கும் அவர் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  ‘மாரி 2 திரைப்பட வில்லனா இவர்?’ என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

வைரலாகும் அவரின் லேட்டஸ்ட் லுக் இதோ….