இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முக்கியப் போட்டியாளர் இவர்தானா?… இந்த டுவிஸ்ட நாங்க எதிர்பார்க்கலையே!…

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முக்கியப் போட்டியாளர் இவர்தானா?… இந்த டுவிஸ்ட நாங்க எதிர்பார்க்கலையே!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது பல வருடங்களுக்கு முன்பே ஹாலிவுட்டில் தொடங்கப்பட்டது. தற்பொழுது ஹாலிவுட்டில் 15 சீசன்களுக்கும் மேல் ஒளிபரப்பாகி ஹிட் கொடுத்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை  கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த ரியாலிட்டி ஷோவில் இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 11 போட்டியாளர்கள் வெளியேற தற்பொழுது 10 போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் இறுதியாக ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிய போவதால் யார் டைட்டில் வெல்வார்கள் என்று எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம்,  விக்ரமன், கதிரவன், மைனா, சிவின், ரக்ஷிதா மற்றும் தனலட்சுமி  நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் சிவின் மற்றும் ரக்ஷிதா குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளனர் என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர்களில் ஒருவர் தான் வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தனலட்சுமி தான் வெளியேறப் போகிறார் என்று தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Begam