KGF 3 படத்தில் நடிக்கும் முக்கிய பிரபலம் இவர்தானா?… படம் ஹிட் தான் போங்க…. அவரே வெளியிட்ட பதிவு இதோ…

By Begam

Published on:

கே ஜி எஃப் 3 படம் குறித்து படத்தில் நடிக்கும் முக்கிய பிரபலம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல கன்னட நடிகரான யாஷ் தற்பொழுது இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவரை அந்த அளவிற்கு உயர்த்தியது 2018 இல் வெளியான கேஜிஎப் சாப்டர் 1 திரைப்படம் தான். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் இவர் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

   

குறிப்பாக இத்திரைப்படம் உலகம் எங்கும் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்பொழுது கன்னட சினிமா படங்கள் எல்லாம் அனைத்து மொழி ரசிகர்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல கே ஜி எஃப் 3  படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் வெற்றி பெற செய்துள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்களின் அடுத்த கேள்வி கேஜிஎப் 3 ரிலீஸ் எப்பொழுது என்பதுதான். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பே. இன்னும் தொடங்கவில்லை இந்நிலையில் நடிகர் யாஷ் உடன் இணைந்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

மேலும்  ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  புகைப்படத்தை பதிவு செய்து கேஜிஎப்3 எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘அப்படி என்றால் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கே ஜி எஃப் 3யில் நடிக்கிறாரா?’ என்று ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு இதோ….