‘அட்டகத்தி’ பட நடிகர் தினேஷின் காதலி இவர்தானா?… ‘அடுத்தது எங்களோட திருமணம் தான்’… முதன்முறையாக அவரே உறுதி செய்த வைரல் வீடியோ… 

By Begam on நவம்பர் 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அட்டகத்தி தினேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் படங்களை இயக்கி வருகின்றனர். அட்டகத்தி தினேஷ் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு அட்டகத்தி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

   

ஆனால் இவர் அதற்கு முன்பு இயக்குனராக வேண்டும் என்ற ஆசைதான் இருந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு பாலச்சந்திரன் உதவி இயக்குனராக சேர்வதற்கு சென்றுள்ளார். அப்போது பாலச்சந்தர் தினேஷ் பார்த்துவிட்டு சிரிக்க சொல்லி உள்ளார். அதன் பிறகு நடிகர் வாய்ப்பு தான் கிடைத்தது என கூறியுள்ளார்.

   

 

மேலும் சினிமாவில் பலரை பார்த்ததாகவும் பலரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். வெற்றிமாறன் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அதன்மூலம் அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என கூறினார். ஆனால் அட்ட கத்தி திரைப்படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகிறது. தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் அட்டகத்தி என்றும் கூறியிருந்தார் நடிகர் தினேஷ்.

அதன்பிறகு குக்கூ படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அதற்காக ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தது என தெரிவித்துள்ளார். தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் தினேஷ். இவர் தற்பொழுது ஒரு பெண்ணுடன் kpy தீனாவின் திருமண ரிசப்ஷனில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு பேட்டி எடுத்த நிருபரிடம் ஜாடை மாடையாக தனது கல்யாண தகவலை பற்றி கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….