நடிகை அசினின் மகளா இவர்?… 5 வயதிலேயே இவ்ளோ அழகா?… வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ!….

நடிகை அசினின் மகளா இவர்?… 5 வயதிலேயே இவ்ளோ அழகா?… வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ!….

நடிகை அசின் மகளான அரினின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2000ல் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின். இவர் ஜெயம் ரவி உடன் நடித்த ”எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சூர்யாவுடன் ‘கஜினி’, விக்ரமுடன் ‘மஜா’, விஜய் உடன் ‘சிவகாசி, போக்கிரி’, அஜித் உடன் ‘வரலாறு’ மற்றும் கமலஹாசனின் ‘தசாவதாரம்’ என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அசின் 2016ல் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனரான ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2017ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘அரின்’ என்று பெயரிட்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமா துறைக்கு குட் பாய் சொல்லிவிட்டு தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகை அசின்.

சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் நடிகை அசின். அவ்வப்போது தனது மகள் அரினின் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். தற்பொழுது அசினின் மகளுக்கு ஐந்து வயது ஆகிறது.

 

இந்நிலையில் நடிகை அசின் கிறிஸ்துமஸ் கொண்டாடிய அரினின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ஐந்து வயதிலேயே இவ்ளோ அழகா?, என்றும் வெரி க்யூட் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அசின் மகளின் புகைப்படம்….

 

Begam