‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவர்?… ஆள் அடையாளமே தெரியலையே!… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!…

‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவர்?… ஆள் அடையாளமே தெரியலையே!… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!…

‘துப்பாக்கி’ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படம் ‘துப்பாக்கி’. இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக  நடித்திருந்தார். துப்பாக்கி திரைப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

70 கோடி பொருட்செலவில்  உருவாக்கப்பட்டு அதைவிட பல கோடி லாபம் ஈட்டிய வெற்றி திரைப்படமாக அமைந்தது துப்பாக்கி.இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் துப்பாக்கி திரைப்படம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது.  இத்திரைப்படம் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். இதில் இளைய தங்கையாக நடித்திருந்தவர் தான் சஞ்சனா பாரதி. இவர் என்றென்றும் புன்னகை, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனா சாரதியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவர்? ஆள் அடையாளமே தெரியலையே’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்….

Begam