நம்ம நயன்தாராவா இது?… தோல் சுருங்கி வயசானவங்க போல  இப்படி மாறிட்டாங்களே!… புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்….

நடிகை நயன்தாரா தற்பொழுது தோல் சுருங்கி வயதானவர் போல தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் தனது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதைத் தொடர்ந்து ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்துள்ளது.

 

சில மாதங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் ‘கோல்ட்’ திரைப்படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

 

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா 75 போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’  திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த புகைப்படத்தில் நயன்தாராவின் தோல்கள் எல்லாம் சுருங்கி, உடல் மெலிந்து, மிகவும் வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம நயன்தாராவா இது?.. என்ன ஆச்சு உங்களுக்கு?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….