‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… அடடா இப்படி ஆயிப் போச்சே!… வைரலாகும் தகவல் இதோ….

‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… அடடா இப்படி ஆயிப் போச்சே!… வைரலாகும் தகவல் இதோ….

‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ பற்றிய தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இயக்குனர் என் கிருஷ்ணன் இயக்கத்தில் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இப்படத்தினை இப்பொழுது ஒளிபரப்பு செய்தால் கூட சலிப்பு தட்டாது. அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நடிகர் சூர்யா இப்படத்தில் ரொமான்டிக் ஆக்ஷன் என எல்ல கதாபத்திரத்திலும் அசத்தி இருப்பார். இப்படம் வெளியாகி அப்பொழுதே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு இசை புயல் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய ‘முன்பே வா என் அன்பே வா’ பாடல் தற்போது வரை ரசிகர்களின் விருப்ப பாடலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் என் கிருஷ்ணன் முதலில் மாதவனை தான் தேர்ந்தெடுத்தார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் மாதவன் சில காரணங்களால் படத்தில் நடிக்கும் முடியாமல் போனதால் நடிகர் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார்.

அதேபோல பூமிகா கதாபாத்திரத்தை ஏற்று அசின் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அவர் இந்த கதாபாத்திரம் தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறிய வெளியேற நடிகை பூமிகா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என்றும் கூறப்படுகிறது.

Begam