நடிகர் சியான் விக்ரமா இது?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே!… வைரல் புகைப்படம் உள்ளே!…

நடிகர் சியான் விக்ரமா இது?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே!… வைரல் புகைப்படம் உள்ளே!…

நடிகர் சியான் விக்ரமின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தனது ரசிகர்களால் ‘சியான்’ விக்ரம் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடைந்துள்ளது. இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து வெளிவந்த கோபுரா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் ஸ்டுடியோ கிரீன் செவன் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் அவ்வப்பொழுது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தற்பொழுது நடிகர் விக்ரம் தங்கலான் படத்தின் கெட்டப்பில் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் என்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம விக்ரமா இது? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….

Begam