CINEMA
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனியின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?…. தீயாய் பரவும் தகவல் இதோ!…
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கைப் போட்டியாளர் ஜனனியின் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டில் மீதமுள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இறுதியாக ஆயிஷா, ராம் என இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டவர் ஜனனி. இவர் இலங்கையில் பிரபல மீடியாவில் பணியாற்றியவர்.
இவர் நிகழ்ச்சியில் நுழைந்த நாள் முதலே இவருக்காக நிறைய ஆர்மிகள் இணையத்தில் தொடங்கப்பட்டது. இவர் தனது ரசிகர்களால் ‘குட்டி த்ரிஷா’ என்று கொண்டாடப்பட்டார். இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருந்த இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் வீட்டை விட்டு தற்பொழுது வெளியேறி உள்ளார்.
இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஜனனிக்கு நாள் ஒன்றுக்கு 21 முதல் 26 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையானதா என்பது நமக்கு தெரியவில்லை. இதை பொறுத்து பார்க்கும் பொழுது பல லட்சங்களை ஜனனி சம்பளமாக பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது.