‘சர்வைவர் தமிழ்’ ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு கல்யாணமா?… இவர்தான் காதலரா?… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்!….

‘சர்வைவர் தமிழ்’ ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு கல்யாணமா?… இவர்தான் காதலரா?… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்!….

சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது வருங்கால கணவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜீ தமிழில் கடந்த ஆண்டு சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.

பிட்னஸ் ட்ரைனர் ஆன இவர் திரை பிரபலங்களுக்கு பிட்னஸ் பயிற்சி அளித்து வருகிறார். மேலும் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பாலோ செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர் தனது காதலரை தனது instagram பக்கத்தில் அறிமுகம் செய்தார். தற்பொழுது அவருடன் நிச்சயமாகிவிட்டது என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்து வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட  நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இணையத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் கவர்ந்து வந்தார் ஐஸ்வர்யா கிருஷ்ணன். இந்நிலையில் இவருக்கு திருமணமா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Begam