‘பாக்கியலட்சுமி’ சீரியலை விட்டு இந்த காரணத்துக்காக தான் ஆரியன் விலகினாரா?… இதுதான் விஷயமா?…

‘பாக்கியலட்சுமி’ சீரியலை விட்டு இந்த காரணத்துக்காக தான் ஆரியன் விலகினாரா?… இதுதான் விஷயமா?…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுசித்ராவுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் அவரிடம் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து அசத்தி வருகிறார். இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியலாகவும், டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னிலையிலும் பாக்யலட்சுமி சீரியல் இருந்து வருகிறது .குடும்பப் பெண்கள் படும் கஷ்டத்தையும் போராட்டத்தையும் மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

தற்பொழுது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலை விட்டு செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் சில மாதங்களுக்கு முன்னர் விலகினார். இதைத்தொடர்ந்து மற்றொரு நடிகர் தற்பொழுது இக்கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஆரியன் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு ஏன் விலகினார் என்ற காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலான ‘கனா காணும் காலங்கள் 2 ‘ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 90ஸ் ரசிகர்களால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்றான இத்தொடரில் நடிப்பதால் தான் அவர் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகினார் என்று கூறப்படுகிறது.

Begam