தளபதி விஜய்யின் மாஸான ஹேர் ஸ்டைலுக்கு காரணம் இவர் தானா?…. அப்படியே அள்ளுங்க அவர!….வைரலாகும் புகைப்படம்இதோ!….

நடிகர் விஜயின் ஹேர் ஸ்டைலுக்கு காரணமான தளபதியின் ஹேர் ஸ்டைலிஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுள்ளார் நடிகர் விஜய். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்பொழுது ‘வாரிசு’ திரைப்படத்தை நடித்துள்ளார். வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது..
சமீபத்தில் கூட மெட்ரோ ரயிலில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் கூறிய குட்டி ஸ்டோரியும் ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமாக உள்ளது.
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மொத்தமாக மாற்றிவிட்டார். மாஸ்டரை தொடர்ந்து பீஸ்ட் தற்போது வாரிசு என அதே ஹேர் ஸ்டைலில் தான் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்டர் திரைப்படத்திற்காக இந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று தளபதியிடம் கேட்டாராம்.
இந்நிலையில் இந்த ஹேர் ஸ்டைலுக்கு காரணமாக தளபதியின் ஹேர் ஸ்டைலிஸ்டின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இவரின் புகைப்படம் தளபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அவரின் புகைப்படம்….